விவசாயிகள் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் !

129

விவசாயிகளின் தொடர் மரணத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். நூற்றுக்கு மேற்பட்டோர் காய்ந்த நாற்றுகளை கையில் ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது கண்டிக்கத் தக்கது என்று சீமான் தெரிவித்தார்.