பாஜகவின் திரையில் ரஜினியின் முகம் தெரிகிறது – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

346

பாஜகவின் திரையில் ரஜினியின் முகம் தெரிவதாக விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி தான் உண்மையான சமூக விரோதி என சாடினார்.

நெல்லையில் செய்தியாளார்களை சந்தித்த அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயமடைந்தவர்கள் யாரும், சமூக விரோதிகள் குறித்து கருத்து தெரிவித்தனரா என கேள்வி எழுப்பினார். பாஜகவின் திரையில் ரஜினியின் முகம் தெரிவதாக விமர்சித்த அவர், ரஜினி தான் உண்மையான சமூக விரோதி என சாடினார். காவிரி பிரச்சனையை பேசி தீர்க்க முடியாத காரணத்தால் தான் நீதிமன்றத்துக்கு அரசு சென்றதாக கூறிய அவர், குமாரசாமியை கமல் சந்தித்ததில் எந்த பயனும் இல்லை என்றார். பெங்களூருவில் 90 சதவீத தமிழர்கள் இருப்பதால் காலா திரைப்படத்தை வெளியிடுவதில் பிரச்சனை இருக்காது என அவர் தெரிவித்தார்.