மத்திய அரசுக்கு துணை போகும் மாநில அரசை தூக்கி எறிய வேண்டும் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

1093

மத்திய அரசுக்கு துணை போகும் மாநில அரசை தூக்கி எறிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டிணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விவசாயிகள், மீனவர்கள் பிரச்சனை குறித்து தமிழக அரசுக்கு கவலை இல்லை என கூறினார். தற்போது தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், பதவிக்காகவும், பணத்திற்காகவும் ஆட்சியாளர்கள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.