தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

211

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் லஞ்ச ஒழிப்பு பாசறையின் துவக்க விழா நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அவர் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காகவே இந்த பாசறையை துவங்கி இருப்பதாகவும், ஊழலை ஒழித்தால் மட்டுமே நாடு வளம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக சீமான் தெரிவித்தார்.