தருமபுரி அருகே 60 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

272

தருமபுரி அருகே 60 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முதலிப்பட்டி கிராமத்தில் மாந்தோப்பின் மையப்பகுதியில் அரசு அனுமதியின்றி தொழிற்சாலை இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சி தலைவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிருந்தா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில், தடைசெய்யப்பட்ட போதை பாக்குகள் தயாரிப்பது கண்டறியப்பட்டு, 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. தொழிற்சாலையின் உரிமையாளர் தப்பிவிட்ட நிலையில், போதை பாக்குகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.