அமெரிக்க வெள்ளை மாளிக்கைக்கு சீல் வைப்பு மர்ம பெட்டி கண்டெடுக்கப்பட்டதால் பதற்றம்

283

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்கு இடமான மர்ம பெட்டி கண்டெடுக்கப்பட்டதையடுத்து வெள்ளை மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே உள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு காரணமாக வெள்ளை மாளிகையில் இருந்த அனைவரும் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர். இதனையடுத்து அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் உடனடியாக வெள்ளை மாளிகைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனிடையே, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த கலிபோர்னியாவை சேர்ந்த ஒருவரை கைதுசெய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளை மாளிகை அருகே மர்ம பெட்டி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.