தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

367

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்ததில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியர்கள், உள்ளிருப்பு போராட்டத்தையும் நடத்தினர்..
பழைய ஒய்வு ஊதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். . இந்த நிலையில், சென்னை தலைமை செயலக ஊழியர்களும் இனறு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தலைமை செயலக வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகள் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்று தலைமை செயலக செயலக ஊழியர்கள் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து போராட்டத்தை திரும்ப பெற்ற ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.