ஜோலார்பேட்டையிலிருந்து இரண்டாவது முறையாக இன்று ரயிலில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது..!

130

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையிலிருந்து இரண்டாவது முறையாக இன்று ரயிலில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

சென்னையில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு 65 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரயிலில் ஏற்கனவே ஒருமுறை 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று 2வது முறையாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீரை சென்னைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தற்போதுள்ள வேகன்களில் சில வேகன்கள் பழுதாகி இருப்பதால் தண்ணீர் வீணாவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.