கூடங்குளம் இரண்டாவது அணு உலையில், பராமரிப்பு பணிகள் முடிந்ததை அடுத்து, நீராவி வெளியேற்றும் சோதனை நாளை நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்று இருப்பதால், நாளை முதல் 2 நாட்களுக்கு நீராவியை வெளியேற்றும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கூடங்குளம் அணு உலையின் முதல் அலகில் இதுவரை 20 ஆயிரத்து 156 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு இருப்பதாக, அணு உலை வளாக இயக்குனர் சவுத்திரி தெரிவித்துள்ளார்.