சர்வதேச தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

396

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோற்றதால், இந்திய அணி சர்வதேச தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொணட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை பெற்றது. இந்நிலையில், பெங்களூரில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் சர்வதேச பட்டியலில் ஒரு புள்ளி குறைந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் இடத்தில் தென்ஆப்ரிக்கா உள்ளது. 1-ம் தேதி நடைபெறும் 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடதக்கது.