ஸ்டெர்லைட் ஆலையில் 2வது நாளாக கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி

56

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள கந்தக அமில கசிவுகளை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமிலம் லாரியில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு கோவைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

பொதுமக்களின் போராட்டத்தையடுத்து, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த ஆயிரம் டன் கந்தக அமிலங்கள் கசிந்து வெளியேறின. இதனையடுத்து ஆலையில் ஆய்வு செய்து, அமிலங்களை வெளியேற்ற மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கந்தக அமில கசிவை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சார் ஆட்சியர் முன்னிலையில் வல்லுநர் குழு கந்தக அமில கசிவை சரி செய்து வருகின்றனர். இன்று 2 வது நாளாக கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணியில் மாசுகட்டுப்பாட்டுதுறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் லாரியில் ஏற்றப்பட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன.