நாட்டுக்கு எதிரான தாக்குதல்களை முன்கூட்டியே கணிக்க தவறியதன் மூலம் இந்திய உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

218

நாட்டுக்கு எதிரான தாக்குதல்களை முன்கூட்டியே கணிக்க தவறியதன் மூலம் இந்திய உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், பதன்கோட், யூரி, பாம்போர், பாரமுல்லா, நக்ரோட்டா இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உறுதியான தகவல்களை தருவதில் உளவுத்துறையினர் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இது நமது உளவுத்துறை மீதுள்ள குறைபாட்டை காட்டுவதாகவும், இந்த தாக்குதல் சம்பவங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விரைந்து விசாரணையை முடிக்க உள்துறை உத்தரவிட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் உளவுத்துறையின் குறைபாடுகளை தெரிந்து கொள்ள முடியும் எனவும் உளவுத்துறை சரியில்லாவிட்டால் பிற்காலத்தில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் எனவும் அந்த அமைப்பு குற்றம்சட்டியுள்ளது.