8-ம் வகுப்பு தேர்ச்சி முறை மாற்றம் பற்றி தகவல் வரவில்லை – செங்கோட்டையன் – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

343

8-ம் வகுப்பு வரை தேர்ச்சி முறை மாற்றம் குறித்த மத்திய அரசின் கடிதம் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு சீருடையும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு சீருடையும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தனி சீருடையும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 8-ம் வகுப்புத் தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்த மத்திய அரசின் கடிதம் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.