தென்மேற்கு பருவமழை தீவிரம் : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

297

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழையால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். இதே போல் கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சியில் இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.