தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் பத்து மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…!

415

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் பத்து மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 மாவட்டங்களில் மழை தொடர்ந்து சில தினங்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பத்து மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதே போல் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் இன்று வழக்கம்போல் நடைபெறும் என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.