நாமக்கல் அருகே பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டி கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்காக தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து பயணித்து வந்தனர். இந்நிலையில், வழக்கம் போல பள்ளி முடிந்த மாணவர்கள் தனியார் பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மாணவர்கள் பயணித்த பேருந்து தூசூர் ஏரி அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டனர்.