சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கல்வித்திறன் உயர்த்தப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்….

91

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கல்வித்திறன் உயர்த்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது மாணவர்களின் வருகை பதிவுகளை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், குறுஞ்செய்தி அனுப்பும் வசதி தொடங்கப்பட்டது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுத, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார். இடஒதுக்கீடு சான்றிதழ்களில் குறைபாடு இருப்பதால், சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்வது தாமதமாகிறது என செங்கோட்டையன் கூறினார்.