அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்ற முடியாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…

365

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்ற முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை இணைந்து அம்மா விளையாட்டு போட்டிகள் ஓசூர் எம்ஜிஆர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், பாலகிஷ்ணாரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைத்து துவங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருவதால், அடுத்து ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என்றார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து நீட் பயிற்சி வகுப்புகள் தமிழக முழுவதும் 412 மையங்களில் தொடங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்ற முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார்.