11 வயது மாணவியை ஆண்கள் கழிவறையில் நிக்கவைத்த உடற்கல்வி ஆசிரியர்..!

812

ஐதரபாத் அருகே பள்ளி சீருடை அணியாததால் 11 வயது மாணவியை உடற்கல்வி ஆசிரியர், ஆண்கள் கழிவறையில் நிக்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஐதராபாத் அருகே உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர் சீருடை அணியாமல் வேறு உடையில் பள்ளிக்கு வந்துள்ளார். இதனை கண்ட உடற்கல்வி ஆசிரியர் சீருடை குறித்து விசாரித்துள்ளார். மாணவி சீருடை அணியாததற்கு உரிய காரணத்தை தெரிவித்தும், அதனை ஏற்றுக்கொள்ளாத உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் நிற்கவைத்து தண்டித்துள்ளார். இந்த செயலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.