ஊர் பஞ்சாயத்து எனக் கூறிக் கொண்டு திருமணத்தை ரத்து செய்யும் முறை செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி ..!

440

ஊர் பஞ்சாயத்து எனக் கூறிக்கொண்டு திருமணம் செய்வதர்களை பிரிப்பது சட்டத்திற்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்ட பஞ்சாயத்துக்கு எதிராக சக்தி வாஹினி என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பாக நடைபற்ற விசாரணையில் கணவன், மனைவி திருமண உறவில் 3 வது நபர் நுழைவது சட்டத்திற்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊர் பஞ்சாயத்து எனக் கூறிக் கொண்டு திருமணத்தை ரத்து செய்யும் முறை செல்லாது எனவும் அறிவித்துள்ளது.
திருமண வயதை எட்டிய இருவர் மணம் முடித்தால் யாரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
கட்ட பஞ்சாயத்தை தடுக்க மாநில அரசுகள் தான் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.