அரசு நலத்திட்டங்கள் பெற ஆதார் எண்ணை அரசு கட்டாயமாக்க கூடாது : உச்சநீதி மன்றம்

184

அரசு நலத்திட்டங்கள் பெற ஆதார் எண்ணை அரசு கட்டாயமாக்க கூடாது என உச்சநீதி மன்றம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கேஸ் இணைப்பு, அரசு மானியம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில், வங்கி கணக்குகளில் ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதை தடுக்க முடியாது என உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆனால், அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.