காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் தலையிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என்ற அறிவிப்பு நிம்மதி அளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

218

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் தலையிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என்ற அறிவிப்பு நிம்மதி அளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தமிழகத்தின் நியாயத்தை புரிந்து கொண்டு செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் தலையிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என்ற அறிவிப்பு நிம்மதி அளிப்பதாகவும் அவர் கூறினார்.