மாட்டிறைச்சி தடைக்கு எதிரான பொதுநல வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

279

மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு கடந்த மே 25 ஆம் தேதி தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, புதுச்சேரி, மேகாலயா ஆகிய மாநில சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த தடை உத்தரவை எதிர்த்து, ஐதராபாத்தை சேர்ந்த தனியார் அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது. கடந்த மாதம் ஜூன் 15 ஆம் தேதி இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கை இன்று ஒத்தி வைத்திருந்தது. இதையடுத்து பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த வழக்கு இன்று விசாரணை வருகிறது.