இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

304

சேலம் கிச்சிப்பாளையத்தில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த இரும்பு வியாபாரியான விஜயலட்சுமி, தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு அவருடைய வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் 720 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து நேரில் வந்து பார்வையிட்ட போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.