முற்றிலும் பெண்களுக்கான கார் விற்பனை கண்காட்சி சவுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது…!

424

முற்றிலும் பெண்களுக்கான கார் விற்பனை கண்காட்சி சவுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இது வரை சவுதி அரேபியாவில் மட்டுமே பெண்கள் வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சவுதி அரேபிய அரசர் சல்மான் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி வரும் ஜூன் மாதம் முதல், அந்நாட்டு பெண்களும் வாகனம் ஓட்டலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சவுதியில் பெண்களுக்கான பிரத்யேக வாகனக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஜெட்டாவில் உள்ள லீ மால் எனப்படும் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்கு ஏராளமான பெண்கள் வருகை தந்தனர்.