ஐ.நா துணை பொதுச் செயலாளராக சத்யா திரிபாதி நியமனம்..!

453

இந்தியாவைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் சத்யா திரிபாதி ஐ.நா.வின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க் ஐ.நா. சுற்றுச்சூழல் மையத்தின் தலைவராகவும் சத்யா திரிபாதிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர், உலக அளவில் பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் பணியாற்றி உள்ளார். இந்தியாவை சேர்ந்த சத்யா திரிபாதி, 35 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், பொருளாதார நிபுணராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில், ஐ.நா.வின் துணை பொதுச் செயலாளராகவும், நியூயார்க் ஐ.நா. சுற்றுச்சூழல் மையத்தின் தலைவராகவும் சத்யா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா. சபை தலைவர் அன்டோனியோ கட்டர்ஸ் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.