சட்டசபை தேர்தலையொட்டி தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

321

சட்டசபை தேர்தலையொட்டி தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதன்படி, தஞ்சையில் எம்.ரங்கசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி நிறுத்தப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முதலமைச்சர் நாராயாணசாமியை எதிர்த்து அதிமுக வேட்பாளராக ஓம்சக்தி சேகர் நிறுத்தப்பட்டுள்ளார்.