சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் | 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

143

சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து 2 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு முதலமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் சட்டப்பேரவை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, சபாநாயகரிடம் திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. பின்னர் எதிர் கட்சிகளை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் உட்பட 5 பேர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், சட்டமன்ற செயலாளர், தலைமை செயலாளர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் தமிழக ஆளுனர் இந்த விவகாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.