சட்டசபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்ணியமாக நடத்தும் சூழ்நிலை இல்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

290

சட்டசபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்ணியமாக நடத்தும் சூழ்நிலை இல்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார் . தற்போதைய சட்டப்பேரவை மரியாதைக்குரிய இடமாக இல்லை என்று அவர் கூறினார். எதிர்க்கட்சியும் இருந்தால்தான் அது ஜனநாயகம் என்று தெரிவித்த துரைமுருகன், இல்லையென்றால் அது சர்வாதிகாரம் ஆகிவிடும் எனக் குறிப்பிட்டார். எதிர்கட்சி என்றால் கேள்வி வாளை சுழற்ற வேண்டும் என்றும், , ஆளும் கட்சி என்றால் பதிலை கேடயமாக பயன்படுத்த வேண்டும் என்றும் துரைமுருகன் கேட்டுக் கொண்டார். மாதிரி சட்டமன்ற கூட்டம் நடத்துவது தவறில்லை என்று தெரிவித்த துரைமுருகன், காளிமுத்து சபாநாயகராக இருந்த காலத்திலும் இதே போன்று நடத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.