தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் ஓபிஎஸ் அணியின் கை ஓங்குகிறது

780

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து 4 ஆண்டு சிறை 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்பதால் சசிகலாவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது.இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணி வலுவடைந்துள்ளது.
4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு 10 கோடி ரூபாய் அபராதம் வழங்கப்பட்டுள்ளதால் சசிகலா இனி முதல்வராக முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா. பின்னர் திடீரென்று தானே முதல்வர் என்று அறிவித்து முதல்வராக தன்னை தேர்வு செய்யும் வேலையில் இறங்கினார். இதனை எதிர்த்த முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக அதிமுக எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் சாரைசாரையாக நேரில் சென்று ஆதரவளித்து வருகின்றனர். சசிகலாவால் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களும் ஓபிஎஸ் அணிக்கு வருவாா்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சசிகலா தரப்பில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவரது கூடாரம் முழுவதுமாக காலியாகி, ஆட்சியமைப்பதில் ஓபிஎஸ் அணியின் வலுவடையும் என்பது தெளிவாகியுள்ளது.