2017-ம் ஆண்டின் தமிழ்நாடு எல்லை வரையறை | சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல்

304

2017-ம் ஆண்டின் தமிழ்நாடு எல்லை வரையறை ஆணைய சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
சட்டப் பேரவையின் இன்றைய கூட்டத் தொடரின்போது, 2017-ம் ஆண்டின் தமிழ்நாடு எல்லை வரையறை சட்ட மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அறிமுகம் செய்கிறார். இம்மசோதாவை இன்றைக்கே நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்த சிறப்புப் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.