ஜிசாட் 9 செயற்கைக்கோள் ஏற்பாட்டு பணிகள் தீவிரம் !

218

ஜிசாட் 9 செயற்கைகோள்களை நாளை விண்ணில் செலுத்துவதற்காக இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜிஎஸ் எல்வி எஃப் ராக்கெட் மூலம் ஜிசாட் 9 செயற்கைக்கோள் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த ராக்கெட் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக 12 ஆண்டுகள் ஆயுல் காலம் கொண்ட ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்து இருக்கிறார்கள். தெற்காசிய மண்டல நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர, மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 ஆயிரத்து 230 கிலோ கிராம் எடைக்கொண்ட இந்த செற்கைகோள், தெற்காசிய நாடுகளில் ஏற்பட கூடிய பேரழிவு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வல்லமை கொண்டதாகும். இந்நிலையில் இந்த ராக்கெட்டின் கவுன் டவுன் இன்று தொடங்கப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.