பவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானை | அப்பகுதி மக்கள் அச்சம்

273

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட ஒற்றை காட்டு யானையால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், அண்ணாநகர் கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்துள்ளது. தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பவானி ஆற்றில் இறங்கிய ஒற்றை காட்டு யானை, நீராடி மகிழ்ந்து ஆட்டம் போட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர், ஆற்றில் ஆட்டம் போட்ட யானை விரட்டியடிக்கப்பட்டது.