சத்யம் திரை அரங்கை வாங்குகிறது பி.வி.ஆர் குழுமம்

540

தென் இந்தியாவில் முக்கிய சினிமா திரையரங்க நிறுவனமான சத்யம் சினிமாசை, இந்தியாவின் பிரபல குழுமமான பி.வி.ஆர். குழுமம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பி.வி.ஆர். குழுமம் நாடு முழுவதும் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தென் இந்தியாவில் முக்கிய சினிமா திரையரங்க நிறுவனமான சத்யம் சினிமாசை பி.வி.ஆர். குழுமம் வாங்கி இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. சத்யம் சினிமா அரங்கு கடந்த 1974-ம் ஆண்டு சென்னையில் ஒரே ஒரு திரையரங்காக தொடங்கப்பட்டது.

தற்போது சென்னையில் மட்டும் எஸ்கேப், சத்யம் சினிமா, எஸ் 2, பலாசோ என பல்வேறு பெயர்களில் இந்த குழுமத்தின் திரையரங்குகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சத்யம் திரையரங்குகளின் 71புள்ளி 7 சதவீத பங்குகளை 633 கோடி ரூபாய் மற்றும் சில பங்குகளைக் கொடுத்தும் மொத்தம் 850 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பி.வி.ஆர் குழுமம் சார்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.