லஞ்சம் வாங்கிய போது தப்பியோடிய காவல் ஆய்வாளர்

139

சத்தியமங்கலத்தில் லஞ்சம் வாங்கிய போது தப்பியோடிய போக்குவரத்து காவல்ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள போக்குவரத்து காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பதி. சத்தியமங்கலம்- பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட சோதனையில் காவல்ஆய்வாளர் பதி, லஞ்சமாக பெற்ற 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணை நடைபெற்ற போது காரில் சென்று தலைமறைவாகினார். லஞ்ச ஒழிப்பு புகாரின் பேரில் ஆய்வாளர் பதி மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மேற்கு மண்டல காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.