சூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..!

167

வடமாநிலங்களில் இன்று சத் பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

உலகெல்லாம் ஒளி கொடுத்து இதமான வெப்பத்தையும் தரும் சூரிய பகவானையும் அவரது இரு துணைவியரையும் வணங்குவதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்நன்னாளில் சூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும் என்பது வட இந்திய மக்களின் நம்பிக்கையாகும் அதிகாலையில் டெல்லி, ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கங்கை, யமுனை போன்ற புனித நதிக்கரைகளில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி அதிகாலையில் உதித்த சூரியனுக்கு நமஸ்காரம் செய்து பூஜைகளை செய்தனர். ஆயிரக்கணக்கில் தீபங்களை ஏற்றிவைத்து ஆற்றில் தவழ விட்டு வழிபாடு நடத்தினர்.