அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா நடராஜன் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

516

அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா நடராஜன் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, சசிகலா சார்பில் அதிமுக துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு பதில் கடிதம் அனுப்பினார். ஆனால், தினகரன் அனுப்பிய கடிதத்தை ஏற்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம்
கடந்த வாரம் தெரிவித்தது. இதையடுத்து, மார்ச் 10 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கெடு விதித்தது. இந்நிலையில், சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்துக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். 70 பக்கங்கள் கொண்ட இந்த கடிதத்தில் அதிமுக தேர்தல் விதிகளுக்கு உட்பட்டே பொதுச்செயலாளர் நியமனம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தம் மீது புகார் தெரிவித்துள்ளவர்கள் அனைவரும் தம்மை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் சசிகலா தெரிவித்துள்ளார்.