சசிகலா நினைத்திருந்தால், என்னை முதல்வராக்கி இருக்கலாம் -டிடிவி தினகரன்!

227

சசிகலா நினைத்திருந்தால், என்னை முதல்வராக்கி இருக்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க அரசை ஊழல் ஆட்சி என்று கூறிய ஓ.பி.எஸ், தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து இருப்பதாக கூறினார். சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராக்கி இருப்பார் என்று தெரிவித்த தினகரன், துணை முதல்வர் பதவிக்கு கூட எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் தன்னை வற்புறுத்தியதாக தெரிவித்தார்.
கட்சியை பலப்படுத்தும் அறுவை சிகிச்சையை தொடங்கி விட்டதாகவும் தினகரன் கூறினார். மேலும் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கையில் புதுச்சேரியில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருப்பதாக விளக்கம் அளித்தார்.