சசிகலாவின் மறுசீராய்வு மனு இன்று விசாரணை!

278

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது மறு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கை நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நரிமன் அமர்வு விசாரிக்க சசிகலா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால், சசிகலாவின் மறு சீராய்வு மனு அன்றைய வழக்கு விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவின் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனை நீதிபதிகள் அமித்தவா ராய், பாப்தே அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.