கணவர் மறைவையொட்டி பரோலில் தஞ்சாவூர் வந்த சசிகலா, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார்..!

1012

கணவர் மறைவையொட்டி பரோலில் தஞ்சாவூர் வந்த சசிகலா, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார்.சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த 20-ந் தேதி காலமானார். இதனையடுத்து, கணவர் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, சசிகலா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, கடந்த 20ஆம் தேதி, பரோலில் தஞ்சாவூர் வந்தார். சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா தஞ்சாவூரில் மட்டுமே தங்கியிருக்கவேண்டும், சென்னைக்கு செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் தங்கி இருந்த சசிகலா, இன்று கார் மூலம் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார். பரோல் முடிவடைந்ததை அடுத்து, சசிகலா சிறைக்கு திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.