கோவில் மண்டபம் கட்டியதற்கான நிலுவைத் தொகையை கொடுக்காமல், மிரட்டி வருவதாக சசிகலா புஷ்பா மீது திருச்செந்தூரை சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.

265

கோவில் மண்டபம் கட்டியதற்கான நிலுவைத் தொகையை கொடுக்காமல், மிரட்டி வருவதாக சசிகலா புஷ்பா மீது திருச்செந்தூரை சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிசகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், திருச்செந்தூர் அருகேயுள்ள நாசரேத் வெள்ளமடம் பகுதியை சேர்ந்த காசிஈஸ்வரன். கொத்தனார் சசிகலா புஷ்பா மீது புகார் அளித்துள்ளார். கோவில் மண்டபம் கட்டுவதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தருவதாக கூறி தனக்கு முன்பணமாக 20 ஆயிரம் ரூபாயை மட்டுமே சசிகலா கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். மண்பட பணி முடிந்தபின்பு, மீதியுள்ள தொகையை அளிப்பதாக சசிகலா புஷ்பாவும், அவரது தந்தை தியாகராஜனும் உறுதியளித்தாக புகார் மனுவில் காசி ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நிலுவைத் தொகையை
தரவில்லை என்றும், மாறாக தன்னை மிரட்டி வருவதாகவும் காசிஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.