சசிகலாவின் ஐந்து நாட்கள் பரோல் நிறைவு பெங்களூரு சிறைக்கு இன்று மீண்டும் செல்கிறார்

2982

ஐந்து நாட்கள் பரோல் முடிந்ததையடுத்து பெங்களூரு சிறைக்கு சசிகலா இன்று மீண்டும் செல்ல உள்ளார்.
அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவர் நடராஜனை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஐந்து நாட்கள் பரோலில் சென்னை வந்துள்ளார். இளவரசியின் மகள் வீட்டில் தங்கியிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை ஐந்து நாட்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கணவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். இந்நிலையில், சசிகலாவின் ஐந்து நாட்கள் பரோல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, பெங்களூரு சிறைக்கு இன்று மீண்டும் செல்ல உள்ளார். சென்னையிலிருந்து கார் மூலம் பெங்களூரு சென்று சிறை அதிகாரிகளிடம் அவர் சரண் அடைய உள்ளார்.