சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் !

403

சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
1994-ம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்ததில் அரசுக்கு ஒரு கோடியே 62 லட்சம் ரூபய் இழப்பு ஏற்படுத்தியதாக சசிகலா கணவர் நடராஜன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சொகுசு கார் இறக்குமதி செய்த வழக்கில் நடராஜன் உட்பட 4 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. உடல் நலக் குறைவால் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் நடராஜன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், நடராஜன் உட்பட 4 பேர் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.