சசிகலா புஷ்பா எம்.பிக்கு வரும் 26ம் தேதி டெல்லியில் 2 வது திருமணம் நடைபெற உள்ளது..!

2709

சசிகலா புஷ்பா எம்.பிக்கு வரும் 26ம் தேதி டெல்லியில் 2 வது திருமணம் நடைபெற உள்ளது. ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமியை மறுமணம் செய்கிறார்.அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி தற்போது தினகரன் அணியில் உள்ளார். முதலாவது கணவர் லிங்கேஸ்வரனுடன் ஏற்பட்ட
கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவகாரத்து பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா மறுமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அவருக்கும் ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமிக்கும் வரும் 26ம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெறுகிறது. இதற்கான திருமண அழைப்பிதழ் வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 41 வயது நிரம்பிய சசிகலா புஷ்பாவுக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.