சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு : டாக்டர் கணபதி தலைமையில் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை ..!

1278

தஞ்சாவூரில் தங்கியுள்ள சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, 15 நாள் பரோலில் வெளியே வந்து தஞ்சாவூரில் நடராஜனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், தஞ்சாவூரை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என்ற நீதிமன்ற நிபந்தனையை ஏற்று, சசிகலா தஞ்சாவூரில் அருளானந்தம் நகரில் உள்ள வீட்டிலேயே தங்கியிருந்து வருகிறார். அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சசிகலாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, டாக்டர் கணபதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, சசிகலாவை யாரும் சந்திக்க வேண்டாம் என தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.