பெங்களூருவில் இருந்து கார் மூலம் சென்னை வருகிறார் சசிகலா!

765

5 நாட்கள் பரோல் கிடைத்ததை தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, பெங்களூருவில் இருந்து கார் மூலம் சென்னை வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 7 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ள சசிகலா, கணவர் நடராஜனை சந்திக்க 15 நாட்கள் பரோல் கோரி விண்ணப்பித்து இருந்தார். இதை பரிசீலித்த கர்நாடக சிறைத்துறை, அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியது. அரசியல் நடவடிக்கையில் ஈடுபட கூடாது, ஊடகங்களை சந்திக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கணவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை மற்றும் பரோல் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றும், வெளியாட்கள் யாரையும் சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை அவரது ஆதவாளர்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, கார் மூலம் அவர் சென்னை வருகிறார். தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் தங்கும் அவர், குளோபல் மருத்துவமனைக்கு சென்று கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரிக்கிறார்.