சசிகலா மனு மீதான விசாரணை 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராக உத்தரவு..!

342

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த கோரிக்கை மனு மீதான விசாரணை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா மரணம் தொடர்பாக தன் மீது புகார் அளித்தவர்களின் விபரங்களை தரக்கோரி விசாரணை ஆணையத்தில் சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கை மனுவை நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரித்தார். சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சசிகலா தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய வருவாய்த்துறை அதிகாரி பாலமுருகன் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பாலமுருகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.