சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?- டி.ஐ.ஜி ரூபா!

1201

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என தகவல் உரிமை ஆணையத்துக்கு டி.ஐ.ஜி ரூபா கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டதாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா புகார் அளித்தார். சலுகைகளை பெற 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவலை அவர் வெளியிட்டார். இதனையடுத்து சலுகைகள் தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் சசிகலாவிடம் லஞ்சம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என தகவல் உரிமை ஆணையத்துக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். சலுகைகள் பெற்றதாக புகார் அளித்த ரூபா சிறைத்துறையிலிருந்து, போக்குவரத்துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.