சசிகலா, தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு எதிரான வழக்கில்முதல்வர், துணை முதல்வர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

288

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்திற்கு தடை விதிக்க கோரி, சசிகலா, தினகரன் தொடர்ந்த வழக்கில் முதலமைச்சர், துணை முதல்வர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எடப்பாடி அணியினர் நிர்வகித்து வந்த அ.தி.மு.க. வங்கி பண பரிவர்தனையை தடை செய்ய கோரியும், சசிகலா தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. வங்கி பண பரிமாற்றங்களை வரும் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என
அதிமுக தலைமை அலுவலக நிர்வாகி மகாலிங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பொதுக்குழுவில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கியது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் 29-ம் தேதிகுள் பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.