சென்னை போயஸ் கார்டனில் சசிகலாவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.

464

சென்னை போயஸ் கார்டனில் சசிகலாவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.
மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில், அவரது தோழி சசிகலா வசித்து வருகிறார். இந்த நிலையில், போயஸ் இல்லத்திற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் இன்று சென்றனர். சுமார் 2 மணி நேரம் சசிகலாவுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.